யாழில் பாவனைக்கு உதவாத பஸ் தரிப்பு நிலையம் அகற்றல்.

யாழ்ப்பாணத்திலுள்ள பாவனைக்கு உதவாத பஸ் தரிப்பிடமொன்று மாநகர சபையால் அகற்றப்பட்டது.

யாழ். இந்துக் கல்லூரியின் கோரிக்கைக்கு அமைவாக கல்லூரி மைதானத்துக்குப் பக்கத்தில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த பாவனைக்கு உதவாத பஸ் தரிப்பு நிலையம் இன்று யாழ். மாநகர மேயரின் பணிப்புக்கு அமைவாக அகற்றப்பட்டது.

குறித்த பஸ் தரிப்பு நிலையத்தில் பல சமூக விரோதச் செயற்பாடுகள் நடைபெறுகின்றன என்று குறித்த பகுதி மக்களால் நீண்ட நாட்களாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த பஸ் தரிப்பு நிலையம் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.