சுகாதார காரணங்களை முன்னிட்டு Online ல் பரீட்சை பெறுப்பேற்று சான்றிதழ்கள்

சுகாதார பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு Online ல் முறையில் மாத்திரம் பரீட்சை பெறுப்பேற்று சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருநாள் மற்றும் பொதுவான சேவைகளுக்கான பிரிவுகள் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சான்றிதழ்களை பெற விண்ணப்பிப்போர் Online முறையில் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

48 மணித்தியாலங்களுக்குள் சான்றிதழ்களை வீடுகளிலேயே பெற்றுக் கொள்ள இதன் ஊடாக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk அல்லது 0112784323 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் 1911 எனும் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் தொடர்பு கொள்ளமுடியும்.

Comments are closed.