24 ஆவது கடற்படை தளபதியாக நிசாந்த உலுகேதென்ன

இலங்கையின் 24வது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டார்.

அவர் ரியர் அட்மிரால் பதவியில் இருந்து வைஸ் அட்மிராலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் பியல் டி சில்வா புதிய கடற்படை தளபதிக்கு சம்பிரதாயபூர்வமாக கடற்படை தளபதியின் வாள் கையளிக்கப்பட்டதுடன், கடமைகளையும் பொறுப்பளித்தார்.

கடற்படை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே அவர் புதிய கடற்படை தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

வைஸ் அட்மிரால் நிஸாந்த உலுகேதென்ன கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

தாயகத்தின் விடுதலைக்காக அரும் பணியாற்றிய வைஸ் அட்மிரால் நிஸாந்த உலுகேதென்ன பல தடவைகள் காயமடைந்துள்ளதுடன் தேச புத்திர விருது உள்ளிட்ட மேலும் பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

Comments are closed.