இணையத்தில் சிறுமி விற்பனை: மாலைதீவு பிரஜை உட்பட மேலும் நால்வர் கைது!

“15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.”

இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“வேறொரு இணையத்தளத்தில் சிறுமியை விற்பனை செய்வதற்காக விளம்பரத்தை பிரசுரித்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த சிறுமியை இணையத்தளத்தின் மூலம் பணம் கொடுத்து வாங்கியதற்காக மாலைதீவு பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு அறையொன்றை வழங்கிய விடுதியொன்றின் முகாமையாளர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.