ஹெய்ட்டி ஜனாதிபதி அடையாளம் தெரியாதோரால் சுட்டுக் கொலை

ஹெய்ட்டி நாட்டின் ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் (Jovenel Moise) அடையாளம் தெரியாத குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அவர் தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக இடைக்கால பிரதமர் Claude Joseph இன்று (07) வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 1 மணியளவில் அடையாளம் தெரியாத குழுவினர் ஜனாதிபதியின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஜனாதிபதியின் மனைவி துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய குழுவில் சிலர் ஸ்பானிய மொழியில் பேசியதாக தகவல் வௌியாகியுள்ளது.

தற்போது நாட்டிற்கு பொறுப்பாகவுள்ள Claude Joseph ஜனாதிபதி மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.