புறநகரங்களிலுள்ள உள்ளக வீதிகள் அபிவிருத்தி நடவடிக்கைகள்.

கொரோனாவுக்கு மத்தியிலும் குருநாகல் மா நகர சபையினால் புறநகரங்களிலுள்ள உள்ளக வீதிகள் அபிவிருத்தி நடவடிக்கைகள்.

குருநாகல் மாநகரசபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீன்; அவர்களுடைய பரிந்துரைக்கு இணங்க குருநாகல் மா நகர சபைக்கு உட்பட்ட தெலியாகொன்ன கண்டி குருநாகல் பிரதான வீதியில் அமைந்துள்ள கூட்டுறவுக்கடையின் அருகில் செல்லும் உள்ளக வீதியின் அங்குரார்ப்பண வைபவம் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீன் தலைமையில் இடம்பெற்றது.

அதேவேளை குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீன்; பரிந்துரைக்கு இணங்க மற்றுமொரு வீதி 04 இலட்சம் செலவில் குருநாகல் மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் தெலியாகொன்ன பகுதியில் அமைந்துள்ள ரியால் உள்ளக வீதி நிர்மாணிக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதில் இப்பிரதேச முக்கிய பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.