அல்லைப்பிட்டியில் கஞ்சாவுடன் ஓட்டோ சாரதி வசமாக சிக்கினார்.

யாழ்., ஊர்காவற்றுறை – அல்லைப்பிட்டியில் ஓட்டோவில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 3 பொதிகளில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 56 வயதுடையவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் ஓட்டோவும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.