சௌபாக்கியா கிராம திட்டம் – மினுவாங்கொடையில் கட்டப்பட்ட 04 புதிய கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு

அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட சௌபாக்கியா கிராம திட்டத்தின் கீழ் ரூபா 500 மில்லியன் செலவில் மினுவாங்கொடையில் கட்டப்பட்ட 04 புதிய கிராமங்கள் திறக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் உருவாக்கப்பட்ட புதிய கிராமங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (07) திறந்து வைத்தார்.

யாகொடமுல்ல – ரசகெவிலி கிராமம்
மெடெமுல்ல – ஹெஙலும் கிராமம்
போதிபிடுவல – கெலுகல் கிராமம்
கொரச – கொஹூ கிராமம் இவ்வாறு திறக்கப்பட்டது.

சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட சௌபாக்கியா கிராம திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்கு ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். மேலும் இதுபோன்ற 500 கிராமங்கள் இலங்கை முழுவதும் கட்டப்படும். அவற்றில் 40 கம்பஹா மாவட்டத்தில் கட்டப்படப்படவுள்ளன. இதில் 29 திட்டங்களுக்கு ஏற்கனவே 135.88 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் அடையாளம் காணப்பட்ட உற்பத்தி நடவடிக்கைகளுக்கான பயிற்சி மற்றும் சந்தை தயாரிப்புகள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

மேலும், சமுர்த்தி இயக்கம் அமுல்படுத்திய 331 பிரிவுகளில் 331 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய வீட்டை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று திறந்து வைத்தார். இந்த வீட்டைக் கட்டுவதற்கு சமுர்த்தி அமைச்சு ரூபா.600,000 செலவிட்டுள்ளது. இதன்போது, வெலிய வெல்ஹேனவில் உள்ள திருமதி.ருவின் சஜிதாவிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வீட்டை கையளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.