வீடியோவில் கெஞ்சி கதறிய பெண்கள்! தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய அதிரடி திருப்பம்

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பல மாதங்களுக்கு பின் தற்போது மேலும் 3 பெண்கள் புகார் அளித்துள்ளது அதிரடி திருப்பமாக பார்க்கப்படும் நிலையில் இதன் விசாரணை இன்னும் துரிதப்பட்டுள்ளது.

பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் ஆகிய 5 பேர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

அந்த வீடியோக்களில் பல பெண்கள் கெஞ்சி கதறி அழும் காட்சிகள் இருந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ என்று வழக்கு விசாரணை விரிவடைந்து கொண்டே சென்றது. இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹேரன் பால், பாபு ஆகிய 3 பேர் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, அருளானந்தம் ஜாமீன் கேட்டு கோவை மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக மேலும் சில பெண்கள் புகார் அளித்துள்ளனர். எனவே, அருளானந்தத்துக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களை அழித்துவிடுவார் என சி.பி.ஐ தரப்பில் வாதாடியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை இந்த வழக்கில் 5 பேர் மட்டுமே புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், திடீரென கடந்த இரண்டு மாதங்களில் மேலும் 3 பெண்கள் பேர் புகார் கொடுத்துள்ளனர். இதனால், புகார் கொடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக சி.பி.ஐ பொலிசார் தனது விசாரணை வேகத்தை மேலும் கூட்டியுள்ள நிலையில் கைது நடவடிக்கையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.