ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவிழா: P.C.R பரிசோதனையுடன்15பேருக்கு அனுமதி.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக ஆலயத்திற்குள் பக்தர்கள் எவரும் செல்ல முற்றாக அனுமதிக்கப்படாத நிலையில் திருவிழாவினை நடத்திசெல்ல நிர்வாகத்திற்கு சுகாதாரபிரிவினர் மற்றும் பொலீசார் அனுமதியினை வழங்கியுள்ளார்கள்.

இதன்படி ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய குருக்கள், ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட 15 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

குறிப்பாக அனைத்து திருவிழாக்களும் பக்தர்கள் எவரும் கலந்துகொள்ளாத நிலையிலும், ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திருவிழாவினை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.