யாழில் பாடசாலை உத்தியோகத்தர்கள் 5,957 பேருக்கு முதலாவது டோஸ்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்கள் 5 ஆயிரத்து 957 பேருக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்பாணம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரண்டாம் கட்டமாக கிடைக்கப் பெற்ற 50 ஆயிரம் கொரோனாத் தடுப்பூசி மருந்துகளில் நேற்று ஐந்தாவது நாளில் 7 ஆயிரத்து 266 பேர் தமக்கான முதலாவது டோஸைப் பெற்றுக்கொண்டனர். கடந்த ஐந்து நாள்களில் 45 ஆயிரத்து 722 பேர் கொரோனாத் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 10 ஆயிரத்து 354 ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்கள் உள்ளனர் என்று விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அவர்களில் 5 ஆயிரத்து 957 நேற்று கொரோனாத் தடுப்பூசியின் முதலாவது டோஸ் நேற்று வழங்கப்பட்டது. இது மொத்த உத்தியோகத்தர்களில் 57.53 சதவீதம் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.