கர்ப்பிணி மனைவியை கொல்ல நினைத்து, குழந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்!

தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொல்லும் முயற்சியில், தவறுதலாக அருகில் படுத்திருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம், தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே நடந்துள்ளது.

சிறுவளையம் கிராமத்தில் கனிமொழி என்ற அந்த கர்ப்பிணிப் பெண் ஒன்றரை வயது மகன் கபிலேஷுடன் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்தார். 11 மணிக்கு திடீரென குழந்தை வீறிட்டு அழும் சப்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, பின்னந்தலையில் அடிப்பட்டு ரத்தம் வெளியேறியவாறு இருந்திருக்கிறது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. குழந்தை அடிபட்டுக் கிடந்த இடத்தில் பெரிய கல் ஒன்று இருந்துள்ளது.

கனிமொழிக்கும் அவரது அக்காள் கணவர் பிரதாப்புக்கும் குடும்பப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால், இரவு போதையில் கனிமொழியைக் கொல்ல கல்லைத் தூக்கி வந்தபோது, நிலைதடுமாறியதில் கீழே விழுந்த கல், குழந்தையின் தலையில் பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதாபை கைது செய்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.