கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் கடந்த வியாழக்கிழமை மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், ஐந்து பிரதேச செயலகங்களில் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஐந்து கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது கரைதுறைப்பற்று நுண்கலைக்கல்லூரி, புதுக்குடியிருப்பு உதயசூரியன் கலாமன்றம் ஆகியவற்றுக்கு தலா ஒரு மிருதங்கமும் மற்றும் ஒட்டிசுட்டான் வரந்தாமன் நாடக மன்றம், துணுக்காய் வளர்நிலா கலைமன்றம், மாந்தை கிழக்கு கலையருவி கலாமன்றம் ஆகியவற்றுக்கு தலா ஒவ்வொரு வயலினும் வழங்கப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மேலும் குறித்த மன்றங்களின் கலைஞர்கள் தமது நோக்கங்கள் தொடர்பாக அதிதிகளுக்கு விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சி.சுஜீவா, உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா, கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் மன்றங்களின் கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.