ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

புல்வாமா: ஜம்மு காஷ்மீரில் அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்து தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் தக்த பதிலடி கொடுத்தனர்.

இதில், அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்த பகுதியில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்நிலையில், பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவனான அய்ஜாஸ் என கூறப்படுகிறது. மற்ற இருவரும் காஷ்மீரை சேர்ந்த தீவிரவாதிகள் என தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.