நீதியை நிலைநாட்ட வேண்டும் கோட்டா; இல்லையேல் மாற்று வழியை நாடுவோம் கத்தோலிக்க ஆயர்கள் குழு வலியுறுத்து.

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குல் தொடர்பில் நீதி வழங்கும் செயற்பாடு திருப்தியளிக்கக்கூடிய வகையில் வௌிப்படைத்தன்மையுடன் இடம்பெறாவிட்டால், அதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டி ஏற்படும்.”

இவ்வாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான தேசிய கத்தோலிக்க ஆயர்கள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நேற்று கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு ஒரு மாதத்துக்குள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் பதில் வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனத் தாம் நம்புவதாகவும் ஆயர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு பேராயருடன் ஐந்து ஆயர்கள், உதவி ஆயர்கள் உள்ளிட்ட 34 பேர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசு, சாட்சியங்களில் வௌியான தகவல்கள் மற்றும் நாடாளுமன்றத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆற்றிய உரை உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குல் தொடர்பில் இதுவரை வௌியாகாத பல விடயங்களை சுட்டிக்காட்டி இந்தக் கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.