ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை மூடிமறைப்பதற்கு முயற்சிக்காதீர் அரசுக்குப் பேராயர் பகிரங்க எச்சரிக்கை.

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னால் இருக்கும் மர்மங்கள் என்ன என்பதனை ஆராய்ந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து இந்த விசாரணைகளை மேலோட்டமாக முன்னெடுத்து, ஒருசிலரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இந்த விடயம் முடிந்துவிட்டது எனக் கூறி, விசாரணைகளை நிலவிரிப்புக்குள் மறைக்க முயற்சிக்க வேண்டாம் என்று அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.”

இவ்வாறு கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள ஒரு சில விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் முன்வைத்துள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

எவ்வாறாயினும் சம்பவத்தின் பின்னால் உள்ள மர்மங்கள் குறித்து ஆராயாமல் வழக்குகளைத் தொடர்வதன் மூலம் எமது மக்களை மகிழ்ச்சியடையச் செய்ய முடியுமென்று அரசோ அல்லது அது சர்ந்த நிறுவனமோ நினைத்தால் அது தம்மைத்தாமே ஏமாற்றுவதாக அமைந்துவிடும்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இது ஆழமான சதித்திட்டம் என்று முன்னாள் சட்டமா அதிபர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சதித்திட்டத்தை அறிந்துகொள்ளும் உரிமை எமக்கு உள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.