நூதனமாக அனுப்பப்பட்ட 88 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

88 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள், சுங்கத் திணைக்களக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இத்தாலி மற்றும் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பொதிச் சேவை ஊடாகக் கொண்டுவரப்பட்ட இரண்டு பொதிகளிலிருந்து குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு 02 என்ற முகவரிகளுக்கு இந்தப் பொதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அவற்றிலிருந்து 534 கிராம் ஹசிஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஹசிஷ் ரக போதைப்பொருள் எனக் கருதப்படும் 320 கிராம் போதைப்பொருளும் அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது.

சொக்லட்டுகள் மற்றும் பாதணிகளுக்குள் மறைத்துவைத்து, குறித்த போதைப்பொருட்கள் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதி சுங்க பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.