மக்களை நடுத்தெருவில் நிறுத்திய ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் சூளுரைக்கின்றார் சஜித்.

“நாட்டின் பொருளாதாரத்தை வரலாற்றில் இல்லாதவாறு பாரியளவு வீழ்ச்சியடையச் செய்து மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டுள்ள ராஜபக்ச ஆட்சியாளர்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டும்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“அரசின் அநியாயங்களினால் தொழிற்சங்ககங்களும் மக்களும் பொறுமை இழந்து விட்டார்கள். அவர்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் வீதிகளில் இறங்கி வெவ்வேறு அணிகளாக நின்று அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புகின்றார்கள்.

அரசுக்கு எதிரான குரல்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எழுப்ப வேண்டும். அப்போதுதான் அந்தக் குரல்கள் பலமிக்க குரல்களாக இருக்கும்.

இந்த அரசு அனைத்து விடயங்களிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தோல்வியடைந்த அரசு ஆட்சியில் எதற்கு?” என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

Leave A Reply

Your email address will not be published.