இலங்கையில் நேற்று அதிகளவிலான தடுப்பூசிகள்! – 3 இலட்சம் பேருக்குச் ‘சினோபார்ம்’

இலங்கையில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையான தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக சினோபார்ம் முதலாவது தடுப்பூசி 2 இலட்சத்து 89 ஆயிரத்து 122 பேருக்கு நேற்று செலுத்தப்பட்டுள்ளது. சினோபார்ம் இரண்டாவதுத் தடுப்பூசி 32 ஆயிரத்து 385 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று ஸ்புட்டினிக் – வி முதலாவது தடுப்பூசி 32 ஆயிரத்து 385 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 15 ஆயிரத்து 202 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பைசர் முதலாவது தடுப்பூசி நேற்று 700 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

கொவிஷீல்ட் இரண்டாவது தடுப்பூசி 36 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரை கொவிஷீல்ட் முதலாவது தடுப்பூசி 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 3 இலட்சத்து 85 ஆயிரத்து 885 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

சினோபார்ம் முதலாவது தடுப்பூசி 34 இலட்சத்து 17 ஆயிரத்து 525 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 11 இலட்சத்து 36 ஆயிரத்து 881 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் – வி முதலாவது தடுப்பூசி ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 3 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 14 ஆயிரத்து 464 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

சைபர் முதலாவது தடுப்பூசி 23 767 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீனப் பிரஜைகளில் 2 ஆயிரத்து 865 பேருக்கு சினோபார்ம் முதலாவது தடுப்பூசியும், 2 ஆயிரத்து 435 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.