நடுத்தெருவுக்கு வந்த ரஞ்சன் ; சந்திமால் தனது வீடொன்றை கொடுத்து உதவ தயார்

பிரபல உடையலங்கார நிபுணரான சந்திமால் ஜெயசிங்க தனது பேஸ்புக் கணக்கில் ரஞ்சன் ராமநாயக்க தனது நெருங்கிய நண்பர் என்றும், இந்த நேரத்தில் அவருக்கு இல்லாத நட்பும் மனிதநேயமும் பயனற்றது என்றும், அதனால்தான் அவர் தனக்கு உள்ள 3 வீடுகளில் ஒன்றை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்க முடிவு செய்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வீடற்ற ரஞ்சன் ராமநாயக்க தனது தங்குமிடமாக மாதிவெலயில் உள்ள உத்தியோகபூர்வ பாராளுமன்ற உறுப்பினர் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் சிறையில் இருப்பதால் அவரது இல்லத்திலிருக்கும் பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார், அதற்கான சலுகை காலம் 20 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையிலேயே சந்திமால் ஜெயசிங்க இப்படியான ஒரு கருத்தை அவரது முகப் புத்தகத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.