கல்கிஸை சிறுமி விவகாரம் – இணையத்தள உரிமையாளரது வங்கி கணக்கில் கோடி கோடியாக பணம்.

சிறுமியொருவரை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட இணையத்தளத்தின் உரிமையாளரது வங்கி கணக்கில் 5 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி ,சட்டவிரோத சொத்து மற்றும் பணம் தொடர்பில் விசாரணை நடத்தும் பொலிஸ் பிரிவினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த சம்பவம் தொடர்பில் 11 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் குறித்த விடயம் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த 11 சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 10 கோடி ரூபா கைப்பற்றப்பட்டு, அந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் ,குறித்த இணையத்தள உரிமையாளரின் வங்கி கணக்கில் 5 கோடிக்கும் அதிக தொகை காணப்பட்டதுடன், அவரது நிலையான வங்கி கணக்கில் 12,199 அமெரிக்க டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இணையத்தள முகாமையாளரின் வங்கி கணக்கில் 70 லட்சத்திற்கும் அதிக தொகை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.