மாநகர பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் கவனத்திற்கு… அமைச்சரின் சூப்பர் அறிவிப்பு

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழகத்தில் கடந்த 12ம் முதல் தற்போது வரை அரசு மாநகர பேருந்துகளில் 78 லட்சம் மகளிர் பயணம் செய்துள்ளதாகவும், 5741 திருநங்கைகள் , 51615 மாற்றுத்திறனாளிகள் , 8396 அவர்களின் உதவியாளர்கள் பயணம் செய்துள்ளனர் என்றும் கூறினார்.

மேலும், 12ம் தேதி முதல் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவச பயண சீட்டு வழங்கப்பட்டு வருவதாக கூறிய அவர்,தமிழகத்தில் மொத்த பயணம் செய்பவர்களில் 56% பெண்கள் எனவும், நாள் ஒன்றிற்கு 28 லட்சம் பெண்கள் பயணம் செய்து வருவதாக தெரிவித்தார். பேருந்துகளில் அதிகளவில் பெண்களே பயணம் செய்து வருவதாகவும், தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் சராசரியாக 68% பெண்கள் தினசரி பேருந்துகளில் பயணம் செய்வதாக குறிப்பிட்டார்.

பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்ற திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறிய அவர், வரும் நாட்களில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், பல ஆண்டுகளாக பேருந்து இயக்கப்படாமல் இருந்த செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி பகுதியில் முதலமைச்சர் உத்தரவின் படி நேற்று முதல் பேருந்து இயக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

போக்குவரத்துத்துறை மக்களுக்காக மட்டுமே லாபத்திற்காக அல்ல என குறிப்பிட்ட அவர், டீசல் விலை அதிகமாக இருப்பினும், டீசல் விலை அதிகரிப்பதால் டிக்கெட் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என்றும், கடந்த 2 தினங்களில் புதுச்சேரிக்கு 364 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிர்பயா திட்டம் மூலம் சென்னையில் 2500 பேருந்துகளில் சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, 70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 41 கோடி பெறப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைப்பெற்று வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் பள்ளி வாகனங்களை FC (தரச்சான்றிதழ் ) செய்து பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, வாகன வரிக்கட்டுவதில் கட்டுவதில் கால நீட்டிப்பு வழங்குவது தொடர்பாக போக்குவரத்துத்துறை ஆணையருடன் ஆலோசனை மேற்கொண்ட பின் முடிவெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு நகர பேருந்துகளில் கடந்த 12ம் தேதி முதல் நேற்று வரை 78 லட்சம் மகளிர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள அரசு நகர பேருந்துகளில் கடந்த 12ம் தேதி முதல் நேற்று வரை 78 லட்சம் மகளிர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.