நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் பலர் மாட்டினர்!

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவகொட பலபொக்க பிரதேசத்தில், அம்பலாங்கொட பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 5 கிராம் 550 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோதமிபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 160 கிராம் மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொரளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீவர காரியால தோட்டப் பகுதியில் 4 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மொரட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹெரோய்ன் விற்பனையில் பெற்றுக்கொண்ட 8 ஆயிரத்து 500 ரூபா பணத்தையும் அவரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 4 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேருவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.