கிணற்றுக்குள் விழுந்த சிறுமி: காப்பாற்ற சென்ற 30 பேர் உயிருக்கு போராடும் அவலம்! நடந்தது என்ன?

கிணற்றில் தவறிவிழுந்த குழந்தையை காப்பாற்ற சுற்றி நின்ற மக்கள் இறுதியில் 30பேருக்கு மேற்பட்டோர் உயிருக்கு போராடிய நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில், விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

குழந்தையை காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு நின்றதால், அதன் சுற்றுச்சுவர் பாரம் தாங்காமல் இடித்து கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதில் 30க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடியதால், பரபரப்பு ஏற்பட்ட நலையில், உடனடியாக மீட்பு குழுவினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் மீட்பு குழுவினர் போராடி வரும் நிலையில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 15க்கும் மேற்பட்டோர் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.