மண்டைதீவு கடற்பரப்பில் 111 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – மண்டைதீவு கடற்பகுதியில் நேற்று கஞ்சா போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 111 கிலோ கஞ்சா போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

மண்டைதீவு கடற்பரப்பில் பயணித்த படகினை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போது கஞ்சா மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவர் கைது செய்யப்பட்டனர்.

பாசையூர் மற்றும் நாவாந்துறை பகுதிகளை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

Comments are closed.