தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு விரைவு

இலங்கையின் 2020ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு நாளை காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 5ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அதனை கண்காணிப்பதற்காக பலர் விருப்பம் தெரிவித்த போதிலும் கொரோனா தடுப்பு முனையின் கீழ் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும் நடைமுறையினால் பலரின் வருகை தடைப்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் முதலாவது அணி நாளை காலை நாட்டிற்குள் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் முதலாவது அணியில் 4பேர் மட்டுமே வருகை தருவதோடு 14 நாட்கள் தனிமைப்படுத்தளிற்கு உட்பட்டு எதிர் வரும் 1ம் திகதிமுதல் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். இதேநேரம் மேலும் ஒரு அணி விரைவில் தாய்லாந்தில் இருந்தும் வருகை தரவுள்ளபோதும் கடந்த தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து மட்டும் 40பேர் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.