அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள் எவ்வாறு மக்களுக்கான அபிவிருத்தியை முன்னெடுப்பார்கள் – அங்கஜன் கேள்வி

அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எவ்வாறு மக்களுக்கான அபிவிருத்திகளை முன்னெடுக்கப் போகின்றார்கள் என முன்னாள் பிரதியமைச்சரும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் எதிலுமே பங்கெடுக்காத கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எவ்வாறு மக்களது அபிவிருத்தி குறித்து சிந்திக்கப் போகின்றார்கள்.

அவர்கள் இம்முறை தமக்கு சந்தர்ப்பம் தருமாறு கேட்பது மீண்டும் தமிழ் மக்களை வைத்து பேரம்பேசி தமது சுயலாபங்களை அடைந்து கொள்வதற்காகவே.

மாவட்டத்திற்கான அபிவிருத்திக் குழுக்கூட்டங்களுக்கு வருகை தாராமல், அக்கூட்டங்களில் பங்களிப்புச் செய்யாமல் எவ்வாறு ஒரு பிரதேசத்தினது அபிவிருத்திக்கான நிதியினை ஒதுக்கிக் கொள்ள முடியும்.

அவ்வாறு எந்தக் கூட்டங்களிலும் பங்களிப்புச் செய்யாமல் விட்டுவிட்டுத் தற்போது இவர்கள் இந்த நேரத்தில் அபிவிருத்தி குறித்துப் பேசுவதில் எந்த விடயமும் சாத்தியமாகப் பேவதில்லை.

அவர்கள் எந்த ஒத்துழைப்புக்களையும் தராதபோதும் நாங்கல் பல பிரதேசங்களில் எம்மால் முடிந்தளவில் பல அபிவிருத்திகளை செய்திருந்தோம்” என முன்னாள் பிரதியமைச்சரும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.