ஏழு பாடசாலைகளுக்கு தொடு கணணிகள் வழங்கிவைப்பு!

நவீன கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மாணவர்களிடையே மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் உள்ள ஏழு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான (டப்) தொடு கணணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

மண்முனை மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் செல்வி.க.அகிலா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
பின்தங்கிய கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினரும் மட்டககளப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னால் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.