தமிழர் சீனாவை எதிரியாக்குவது இப்போது ஆரோக்கியமானதல்ல அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் கருத்து.

“இப்போதைய நிலைமையில் தமிழர்கள் சீனாவை எதிரியாக்குவது ஆரோக்கியமானதல்ல.”

இவ்வாறு அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் பொதுச்செயலாளருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சீனா கடலட்டை பண்ணை ஒன்றை அமைத்து கடலட்டை குஞ்சுகளை வளர்த்து வருகின்றது. அதனை ஏற்றுமதி செய்ய இருக்கின்றது.

இந்த விவகாரம் தமிழர்கள் மத்தியில் ஒரு பேசு பொருளாக உள்ளது.

இதற்குப் பல்வேறு பக்கத்தில் இருந்தும் பலமான கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஆனால், நாம் இந்த விடயத்தை நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.