முதலமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி!

இந்தியாவின் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

1987-ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆன சுதிர் குமார் நேற்று (சனிக்கிழமை) பீகார் மாநிலம் கர்தானிபாக் காவல் நிலையத்திற்கு சென்று பீகார் மாநில முதலமைச்சர், முன்னாள் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) மனு மஹாராஜ் உட்பட 21 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய சென்றுள்ளார்.

ஆனால், அவர் காவல் நிலையத்தில் நான்கு மணி நேரமாக காத்திருந்த போதிலும், அவருடைய புகார் பதிவு நேற்று செய்யப்படவில்லை.

“இரவு 12 மணி வரை காத்திருந்தேன் ஆனாலும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. காவல் நிலையத்திலிருந்து எனக்கு ஒரு ரசீது மட்டும் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தொடர்பானது” என சுதிர் கூறினார்.

பின்னர் எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் காவல்நிலைய வாலாக்கத்தைவிட்டு வெளியேற மறுத்த பிறகே, அவரது புகாரை ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி பெற்றுக்கொண்டார்.

“சுதிர் குமாரின் விண்ணப்பத்தை நாங்கள் பெற்றுக்கொண்டோம். ஆனால் அதன் உள்ளடக்கத்தை நாங்கள் இன்னும் படிக்கவில்லை . உள்ளடக்கத்தை படித்த பிறகே புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என கர்தானிபாக் எஸ்.ஐ அருண் குமார் தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி சுதிர் குமார், முன்னாள் முதலமைச்சர் ஜிதின் ராம் மஞ்சியின் காலத்தில் முதன்மை உள்துறை செயலாளராக பணியாற்றியுள்ளார். தற்போது வருவாய் வாரியத்தின் கொடுத்தால் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆட்சேர்ப்பு முறைகேட்டில் குராமசாட்டப்பட்டவர் சுதிர், தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

அவர் தற்போது அளித்துள்ள புகார் குறித்து மேலதிக விபரங்களை பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.