வீ்ட்டிற்கு வந்த மந்திரவாதியால் ரோட்டுக்கு வந்த கோடீஸ்வரர்: நடந்த துயரம் தான் என்ன?

இந்தியாவில் மாந்திரீகர் ஒருவரால் கோடீஸ்வரர் ஒருவர் 94 லட்சத்தினை இழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் காந்திநகரில் உள்ள பெட்டாபூரைச் சேர்ந்தவர் ஹிடேஷ் யாகிக். மாந்திரீகரான இவர் பில்லி, சூனியம் செய்வது, அப்பகுதி மக்களிடம் மந்திரங்கள் செய்து மக்களிடம் ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார்.

அவர் தன்னுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறும், மேலும் தன்னை பல கோடிகளுக்கு அதிபதியாக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

உடனே அந்த யாகிக் அவரின் வீட்டில் சில பூஜைகள் செய்வதாக கூறி அடிக்கடி பல லட்சங்கள் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தினை வாங்கியுள்ளார்.

மேலும் ஒரு ஆசிரமம் கட்டுவதாக கூறி 94 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை அவரிடமிருந்து ஆட்டையப் போட்டுள்ளார் .

கடந்த பத்து ஆண்டுகளாக இந்த மோசடியை செய்து வந்தவர், நில மோசடியையும் செய்து வந்துள்ளார்.

இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததோடு, மந்திரவாதி மீது வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.