அனைத்து மக்களுக்கு உள்ளம் கனிந்த ஈதுல் அல்ஹா பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

கொரோனாவால் இலங்கை மட்டுமல்ல முழு உலகமுமே பாதிக்கப்பட்ட நிலையில் முஸ்லிம்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

இத்திருநாளில் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கு உள்ளம் கனிந்த ஈதுல் அல்ஹா பெருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமிதம் அடைகின்றேன் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகார செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
இப்றாஹீம் நபி அவர்களது தியாகத்தை படிப்பினையாகக் கொண்ட இத்திருநாளில் முஸ்லிம்களாகிய நாம் இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுடன் மிக நெருக்கமான பரஸ்பர நட்புறவைப் பேணி ஒற்றுமையாகவும் சகவாழ்வுடனும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்த இக்கெட்டான தருணத்தில் முஸ்லிம் கொரொனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான தேவைப்பாடாக தோன்றுகிறது. ஏனெனில் முஸ்லிம்களால் உருவான கொரோனா தொற்று அணி என்கின்ற பெயரில்லாமல் முஸ்லிம்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

இப்பெருநாள் தினத்தில் நாங்கள் அனைவரும் கற்றுக் கொள்ளக் கூடிய படிப்பினைகள் ஏராளமாகும். அதனை எமது வாழ்க்கையிலும் எடுத்து நடந்து ஒரு முன்மாதரிமிக்க சமூகமாக நாங்கள் வாழ வேண்டும். எனவே இந்நாளில் இலங்கை வாழ் அனைவருக்கும் தியாக பெருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனறு அவர் மேலும் தெரிவித்தார்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.