கெஸ்பாவை ஆடை நிறுவனத்தில் ஐவருக்கு ‘டெல்டா’ வைரஸ் உறுதி 120 பேருக்குக் கொரோனாத் தொற்று.

கெஸ்பாவையிலுள்ள ஆடை நிறுவனமொன்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், ஐவருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த நிறுவனத்தில் மேலும் 120 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கெஸ்பாவை பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனத்தில் ஐவருக்கு முதலில் டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதனையடுத்து அங்கு பணியாற்றும் 166 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே, 120 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றுக்குள்ளாகியவர்களின் மாதிரிகள் ‘டெல்டா’ பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றும் கெஸ்பாவை பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.