உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதிகோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த மலையக சிறுமி ஹிஷாலினிக்கு நீதி வேண்டும் எனக்கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்ணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் குறித்த சிறுமியின் மரணத்துக்கான நீதி கண்டறியப்பட வேண்டும், குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும், சிறுமிகளை வேலைக்கு அமர்த்துவதை தவிர்க்க வேண்டும், வயது குறைந்தவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடை செய்யப்படவேண்டும், சிறுவர்களுக்கான ஒரு நீதிமன்ற பொறிமுறையை இலங்கை அரசாங்கம் வகுக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் முக்கியஸ்தர்கள் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென பல்வேறுபட்ட வாசகங்களை தாங்கியவாறு கோசங்கள் எழுப்பியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

Leave A Reply

Your email address will not be published.