133 வருட பழமையான பள்ளியை தத்தெடுத்த நடிகருக்கு குவியும் பாராட்டு!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சுதீப் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், ஏழை, எளியோருக்கும் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது தனது சொந்த ஊரான ஷிவமோகாவில், 133 வருட பழமையான பள்ளியைத் தத்தெடுத்துள்ளார்.

இந்த பள்ளியின் கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, சிதிலமடைந்து காணப்படுகிறது. இதுபற்றி தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. இதனை பார்த்த சுதீப், அந்த பள்ளிக் கூடுத்தை தத்தெடுத்து பள்ளிக் கட்டிடங்களை புதுப்பிக்கவும் அங்கு நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் முடிவு செய்துள்ளார்.

அதன்படி அவர் அந்த பள்ளிக் கூடத்தை தத்தெடுத்தார். இதைத்தொடர்ந்து, அந்த பள்ளியின் கட்டிடம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பள்ளியை தத்தெடுத்த நடிகர் சுதீப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.