தடுப்பூசி செலுத்தி கொண்டீர்கள் என கேள்விப்பட்டேன்.. ராகுலுக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர்!

கொரோனா 3வது அலையைத் தடுக்க நாட்டில் 60 சதவீதம் மக்களுக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் குறைந்தபட்சம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கவேண்டும். அதற்கு நாள்தோறும் நாட்டில் 94 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால் தற்போது கடந்த ஒரு வாரத்தில் சராசரியாக 36 லட்சம் முதல் 38லட்சம் வரை மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை நாட்டில் 47 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதை பலமுறை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசி வருகிறார். இதுதொடர்பாக ராகுல் காந்தி ட்விட்டரி்ல் பதிவி்ட்ட கருத்தில், ஜூலை மாதம் கடந்துவிட்டது. தடுப்பூசி பற்றாக்குறை மட்டும் போகவில்லை, என்று தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி எங்கே என்ற ஹேஸ்டேக்கையும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, ராகுல் காந்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டதை குறிப்பிட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுலை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, ஜூலை மாதத்தில், நாட்டில் 13 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 13 கோடி மக்களில் நீங்களும் ஒருவர் என்று நான் கேள்விபட்டேன்.

ஆனால், நீங்கள் எங்கள் விஞ்ஞானிகளுக்காக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை, அல்லது தடுப்பூசி போடுமாறு மக்களிடமும் முறையிடவில்லை. நீங்கள் தடுப்பூசி என்ற பெயரில் அற்ப அரசியல் செய்கிறீர்கள். நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை.. ஆனால் உங்களுக்கு முதிர்ச்சி இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.