இணையவழி கற்பித்தல் புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடர்வதா? இல்லையா? – ஆசிரியர் சங்கத்தினர் இன்று தீர்மானம்.

தாங்கள் முன்னெடுக்கின்ற இணையவழி கற்பித்தல் புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படும் என்று அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் தொடர்பில் முன்வைக்கப்படும் தீர்வின் அடிப்படையிலேயே தீர்மானம் தங்கியுள்ளது என்றும் அந்தச் சங்கங்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என்றும் அந்தச் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சம்பளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கல் மற்றும் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகச் சட்டமூலத்தை இரத்துச் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்தும் 22 நாட்களாக ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளைப் புறக்கணித்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.