‘சிடெட்’ தோ்வு முறையில் மாற்றம்: சிபிஎஸ்இ தகவல்

சிபிஎஸ்இ பள்ளிகளில் பணிபுரிய நடத்தப்படும் ‘சிடெட்’ எனப்படும் மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

காகிதப் பயன்பாட்டைத் தவிா்க்கும் நோக்கில் சிடெட் தோ்வு இணையவழித்தோ்வாக நடைபெறும். கேள்வித்தாள் மேலோட்டமாக இல்லாமல் உள்ளாா்ந்த புரிதலை ஏற்படுத்துதல், தா்க்க அறிவு, அறிவாற்றல் செயலாக்கத்திறன், ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றை மதிப்பிடும் வகையில் உருவாக்கப்படும். தோ்வுக்கான மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும். தோ்வா்கள் விருப்பமான மையங்களைத் தோ்வு செய்து கொள்ளலாம். ஏற்கெனவே உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தோ்வு நடைபெறும். சிடெட் தோ்வுக்கான அட்டவணை, விண்ணப்பிக்கும் முறை போன்றவை குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.