19 தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை விரைவாக தகனம் செய்வதற்கு நடவடிக்கை

ராகமை போதனா ஆஸ்பத்திரியின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களது சடலங்களை விரைவாக தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் நிமால் லன்சா ஆலோசனை வழங்கியுள்ளார்.

ராகம வைத்தியசாலையில் காணப்படும் கொவிட் -19 தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை துரிதமாக தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் மற்றும் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கைகள் மீண்டும் தாமதமடையாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தலைமையில் ராகம வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அதற்கமைய ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் தனகம் செய்வதற்கு தாமதமாகியுள்ள 26 கொவிட் -19 சடலங்களையும் துரிதமாக மஹர, வத்தளை, பியகம, ஜாஎல, கட்டான மற்றும் நீர்கொழும்பு ஆகிய நகரசபை மற்றும் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள தகனசாலைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகள் மிகவும் மனிதாபிமானமாகவும் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சங்கடப்படுத்தாத வகையிலும் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த பிரதேசங்களின் நகர சபைத் தலைவர் மற்றும் பிரேதசபை தலைவர் இது தொடர்பான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பர்.

அதற்கமைய ராகம வைத்தியசாலையை அண்மித்த மஹர, வத்தளை, ஜாஎல, கட்டான, பியகம, நீர்கொழும்பு ஆகிய நகரசபை மற்றும் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் தகனசாலைகளில் கொவிட் -19 சடலங்களை தனகம் செய்வதற்கும் தேவைக்கேற்ப கம்பஹா மாவட்டத்திலுள்ள ஏனைய தகன சாலைகளையும் இந்த நடவடிக்கைகளுக்காக உபயோகித்துக் கொள்வதற்குமான ஒருங்கிணைப்புக்களை பிரதேசசபைத் தலைவர் , நகரசபைத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் முன்னெடுப்பதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.