முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் : இஸ்திஹார் இமாமுதுதீன்

நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா காரணமாக அக்குறணை பிரதேச சபைக்கு உட்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என மத்திய மாகாண ஆளுநர் மற்றும் மத்திய மாகாண சுகாதாப் பணிமனையின் பணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக என்று அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதுதீன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
எமது நாட்டில் திரிவு படுத்தப்பட்ட டெல்டா வைரஸ் தீவிரமாகப் பரவி உயிரைக் காவு கொண்டு வரும் வேளையில் அதன் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு வெறும் முகமாக மக்களுடன் அதிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள முச்சக்ர வண்டி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றுவது அவசியமாகும்.

அக்குறணைப் பிரதேசத்தில் மொடோனா தடுப்பூசிகள் முதலாம் கட்டமாக ஏற்றப்பட்ட போதிலும் இரண்டாம் கட்டத் தடுப்புசிகள் போடுவதற்கு முன்னர் அக்குறணைப் பிரதேசத்திலுள்ள முச்சக்ர வண்டி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அக்குறணை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 20 முச்சக்கர வண்டி தரிப்பிட நிலையங்கள் உள்ளன. பதிவு செய்யப்பட்ட சுமார் 500 க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். இவை தவிர பிரத்தியேகமான முச்சக்கர வண்டி ஓட்டுநர்களும் உள்ளனர். எனவே இவர்கள் அனைவரும் அதிகளவு மக்களுடன் நெருக்கமான தொடர்பினை வைத்துள்ளனர். இவர்களுக்கான தடுப்பூசிகளை அவசமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் தடுப்பூசியினைப் பெற்றுக் கொண்ட அக்குறணை மக்கள் அனைவரும் முகக் கவசத்தினை முறையாக அணிந்து கைகளை நன்றாகக் கழுவி அத்தியாவிசய தேவைகiளுக்கு மாத்திரம் விட்டை விட்டு வெளியே செல்ல் வேண்டும் எனவும் வெளியே செல்லும் தருணங்களில் கட்டாயம் சமூக இடைவெளியைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே எமது அக்குறணை பிரதேசத்தின் பாதுகாப்பு ஊர் மக்களாகிய தங்களது நடவடிக்கையிலேயே தங்கியுள்ளது. அது தார்மிகப் பொறுப்பாகும். எனவே சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி ஒரு முன்மாதரிமிக்க பிரதேசமாக காட்டுவதற்கு சகல ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என மக்களிடம் வேண்டிக் கொள்வதோடு முச்சக்ர வண்டி ஓட்டுநர்களுக்கான தடுப்பூசியினை துரிதமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக என மேலும் தெரிவித்தார்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.