ஒரே நாளில் அதிகரித்த கோவிட் மரணங்கள் : முதல் முறையாக 100யை தாண்டியது!

சுகாதார சேவைகள் இயக்குநர் பணிப்பாளர் 111 கோவிட் மரணங்கள் இடம்பெற்றதாக  உறுதி செய்துள்ளார், இது நாட்டில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் இறப்புகள் ஆகும்.

அவர்களில் 55 பெண்களும் 56 ஆண்களும் அடங்குவர்.

நேற்றைய (8)  111 இறப்புகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், நாட்டில் மொத்த கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 5,222 ஆக உயர்ந்துள்ளது.

இறந்தவர்களில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 90 பேர் அடங்குவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.