அசாமில் பயங்கரம்.. தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமியை கடத்தி சென்று நரபலி கொடுத்த சாமியார்!

இந்தியாவில் 5 வயது சிறுமியை கடத்தி சென்று நரபலி கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் சாரீடியோ மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தையை கடந்த 9-ஆம் திகதி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்கள் கடத்தி சென்றுள்ளனர்.
தனது பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த தங்கையை காணாததால் அவரின் மூத்த சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மறுநாளே வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் குழந்தையின் சடலம் மிதந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் குழந்தையுடன் சிவப்பு துணி, சாம்பல் மற்றும் தாந்திரீகம் போன்றவை இருந்துள்ளது. இதனால் குழந்தை நரபலி கொடுத்திருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் பொலிஸார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அது பழங்குடியினர் வசித்து வரும் கிராமம் என்பதால் நரபலி போன்ற பல கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது.