தென்மராட்சியில் இன்று 18 பேருக்குக் கொரோனா.

யாழ்., தென்மராட்சி – சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 18 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று 68 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையின்போது 18 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில், சாவகச்சேரி தனியார் நிறுவன ஊழியர், கொடிகாமம் மீன் சந்தை வியாபாரி, வெளிமாவட்டங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள், இலங்கை போக்குவரத்துச் சாலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 18 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, தென்மராட்சி பிரதேசத்துக்குட்பட்ட கொடிகாமம், சாவகச்சேரி, வரணி, எழுதுமட்டுவாழ் பகுதிகளில் கொரோனா அபாய நிலை அதிகரித்துள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதாரத் தரப்பினர், பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொரோனாத் தொற்று மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்ப்பதுடன், அத்தியாவசியமான பயணங்களின்போது சுகாதார வழிபாட்டல் அறிவுறுத்தல்களை மிகவும் இறுக்கமாகப் பேணுமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.