பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 39\3

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அந்நாட்டு அணியுடன் 4 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து, நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றிபெற்றது.

இதனை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை நேற்று டிக்ளேர் செய்தது. அந்த அணியின் அலம் அதிகபட்சமாக 124 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் பிரெத்வெயிட் மற்றும் பவுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பவுல் 5 ரன்னிலும், பிரெத்வெயிட் 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். அடுத்துவந்த பொனீர், ரோஸ்டன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோஸ்டன் 10 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.

இறுதியில் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. பொனீர் 18 ரன்னிலும், ஜோசப் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இதன் மூலம் 2-வது டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணியை விட 263 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.