கண்டி மாவட்டத்தில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு.

கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட கடுகன்னாவ பிராந்திய சுகாதாரப் பிரிவில் 55995 நபர்களுக்கு இரண்டாம் கட்டம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்புசிகள் ஏற்றும் நடவடிக்கைள் இம்மாதம் 23 ஆம் முதல் 31 ஆம் திகதிவரையிலும் முன்னெடுப்படும்.

corna injection

அந்தவகையில் முறுத்தலாவ பிரதேசத்தில் 23 ஆம் திகதி முதல் இன்று 25 ஆம் திகதி வரையிலும் வரையிலும் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முறுத்தவால பெலேவ மஹா வித்தியாலயத்தில் 23 ஆம் திகதி 60 வயது மேற்பட்டவர்களுக்கு 6630 தடுப்புச்சிகளும். 24, ஆம் திகதி 30 வயது முதல் 60 வயது வரையிலும் உள்ளவர்களுக்கும் 6048 தடுப்பூசிகளும் இன்று 25 ஆம் திகதிகளில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 6507 தடுப்புசிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

corna injection

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதன்போது யட்டிநுவர பிரதேச சபையின் தவிசாளர் நிசாந்த ரூபஸ்சார, பிரதேச சப உறுப்பினரும் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் இணைப்புச் செயலாளருமான வசீர் முக்தார். உப தவிசாளர் சாந்த ராஜபக்ஷ, பிரதேச சபை உறுப்பினர் ஹேமந்த ஜயசேகர உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பொது மக்கள் நாடு முழுமையாக முடக்கப்பட்ட நிலையிலும் மிகுந்த ஆர்வத்துடன் வருகை தந்து தடுப்பூசிகைள ஏற்றிக் கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.