கொரணா சமூக பாதுகாப்பு நிதிக்காக மாதச் சம்பளத்தை வழங்கிய மாநகர சபை உறுப்பினர்.

குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீன் அவர்கள் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு தன்னுடைய முழுப் சம்பளத் தொகையான வழங்கி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நாட்டில் அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க குருநாகல் மாநகர சபை உறுப்பினர் என்ற வகையில் தன்னுடைய முழு சம்பளத் தொகையினையும் இங்கு முதன்முதலாக வழங்கியுள்ளேன்.

கொரோனாவினால் எமது நாடும் எமது நாட்டு மக்களும் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு நாங்கள் ஒவ்வொரு ஒத்துழைப்பு வழங்குவது தார்மிகக் கடமையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.