பஹந்துடாவ: சமூக ஊடகங்களில் பகிரப்படும் தவறான புகைப்படத்தால் டிக் டொக் தம்பதியினர் பிரச்சனையில்…..(வீடியோ)

பஹந்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகே உருவாகியுள்ள ஆபாச வீடியோவால் , தங்களுக்கு தேவையற்ற பிரச்சனைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக எதிர்கொண்ட குஷான் மற்றும் கயாத்திரி என்ற தம்பதியினர், ஹரி டிவி யூடியூப் சேனலில் ஹரி லஹிரு முதலிகேயுனான உரையாடலில் தெரிவித்துள்ளனர்.

குஷான் மற்றும் காயத்திரி இருவரும் பேஸ்புக் மற்றும் டிக்டோக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பஹந்துடா நீர்வீழ்ச்சி அருகே எடுத்த புகைப்படங்களை , ஆபாச வீடியோவுடன் இணைக்கப்பட்டிருப்பதால் தங்கள் வாழ்க்கையில் கடுமையான பிரச்சனை ஏற்பட்டுள்தாக தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நடந்த இந்த சம்பவம் தனக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும், நேரடி குற்றச்சாட்டுகளால் இப்படியான ஒரு நிலைமையை எதிர்கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்னர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தம்பதியினரின் செயலோடு இணைத்து வெளியிட்டுள்ளோருக்கு எதிராக , எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர்கள் கூறினர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் , டிசம்பர் 19, 2020 அன்று எடுக்கப்பட்டவை என அவர்கள் தெரிவித்தனர்.

குஷான் மற்றும் கயாத்திரி லஹிரு முதலிகே உடனான முழு சிங்கள நேர்காணல் கீழே இதோ :-

Leave A Reply

Your email address will not be published.