32 கஞ்சா செடிகளுடன் ஒருவர் சிக்கினார்!

இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொடை, சீலங்கம பிரதேசத்தில் 32 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பலாங்கொடை சமனெலவெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சின்தக்க ஜயசிங்கவுக்குக் கிடைத்த இரகசியத் தகவல்களை அடுத்து குறித்த பிரதேசத்தைச் சுற்றிவளைத்தபோதே கஞ்சா செடிகளுடன் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.