சாதனை வீரர்களுக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு.

டோக்யோவில் நடைபெற்ற பராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இலங்கைக்கு பதக்கங்களை பெற்றுக்கொடுத்த வீரர்களான தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் சமித துலான் கொடிதுவக்கு நேற்று மாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நேற்று மாலை 4.20 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களுக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களை வரவேற்பதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் விளையாட்டு அமைச்சின் மூத்த அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

Leave A Reply

Your email address will not be published.