இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம் பிடிக்க விரும்புகிறேன். குருனல் பான்டியா.

கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவ்வப்போது வந்து நன்றாக ஆடி விட்டுச் செல்பவன் இல்லை நான், எப்போதும் நன்றாக ஆடி நிரந்தர இடம் பிடிக்க ஆசைப்படுகிறேன், என்கிறார் குருணால் பாண்டியா. இவர் அதிரடி மன்னர்களான 360 டிகிரி வீரர் ஏபி டிவில்லியர்ஸையும் இந்தியாவின் ரிஷப் பந்த்தையும் ஐபிஎல் தொடரில் அதிக முறை வீழ்த்தியுள்ளார்.

அதாவது ஏ.பி.டிவில்லியர்ஸ் விக்கெட்டை ஐபிஎல் தொடர்களில் 4 முறை வீழ்த்தியுள்ளார், டிவில்லியர்ஸ் இவரது பந்து வீச்சில் 47 பந்துகளில் 51 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். பொதுவாக டிவில்லியர்ஸ் போன்றவர்கள் 30 பந்துகளில் சதமெடுப்பவர்கள், எடுத்தும் உள்ளார். அவரை 47 பந்தில் 51 ரன்கள் என்று குருணால் கட்டிப்போட்டுள்ளார்.

அதே போல் இந்தியாவின் ரிஷப் பந்த், இவர் எந்த ஸ்பின்னரையும் கொன்று எடுத்து விடுவார். அவரை 3 முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் வீழ்த்தியுள்ளார் குருணால் பாண்டியா. இது தொடர்பாக அவர் கூறும்போது, “டிவிலியர்ஸ் எனக்கு பிடித்த வீரர்களில் ஒருவர். அவருக்கு 47 பந்துகளில் 51 ரன்கள் கொடுத்து 4 முறை வீழ்த்தியுள்ளேன் என்பது நல்ல புள்ளி விவரம்.

2016-17 ஐபிஎல் தொடரில் டிவில்லியர்ஸை சில முறை வீழ்த்தினேன், அதன் பிறகு அவர் கையில் அடி வாங்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். பெரிய வீரர்களுக்கு வீசும்போது இப்படித்தான் நான் நினைப்பேன், அவர் நம்மை அடித்து நொறுக்கினால் இழப்பதற்கு ஒன்றுமில்லை ஏனெனில் பெரிய வீரர் அடிக்கவே செய்வார் என்பதே பெரும் நோக்காக இருக்கும். ஆனால் அதே சமயத்தில் நான் அவரை வீழ்த்துகிறேன் என்றால் அது பெரிய பாராட்டுதலுக்குரியதாகும். அவர்களுக்கு சவால் அளிக்க எனக்குப் பிடிக்கும்.
நான் எப்போதும் பெரிய வீரர்களைப் பார்த்து ஆச்சரியத்துடன் பயப்பட்டதில்லை. வளர்ச்சி அடைய வேண்டுமெனில் பெரிய வீரர்களுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்பதை அறிவேன்.

ரிஷப் பந்த்திற்கும் அப்படித்தான், நான் எப்போதும் எளிதான பேட்ஸ்மென்களுக்கு வீசுவதற்காக பயிற்சி செய்பவனல்ல, ஸ்பின்னர்களை கொன்று விடுவார் ரிஷப் பந்த் என்பதை நான் அறிவேன். இத்தகைய சூழ்நிலையில்தான் நான் கடினமாக உழைக்கிறேன். சிறந்தவற்றை அளிக்க விரும்புகிறேன்” இவ்வாறு கூறினார் டிவில்லியர்ஸ்.

Leave A Reply

Your email address will not be published.